Description
ஆதிகாலந்தொட்டுக் கதை சொல்வதிலும், கேட்பதிலும் ஆர்வம் யாவருக்கும் விருப்பமானதொன்று. மனதில் சந்தோசத்தை ஏற்படுத்தி நிம்மதியை தருவது. கதை கூறும்போது சொல்பவருக்கும். கேட்பவருக்கும் கற்பனா சக்தி விரிவடைகிறது. பலவகையான கதைகள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகைக் கதை பிடிக்கும். பொழுது போக்குக்காகக் கதை சொல்லுகின்ற பழக்கம் ஏற்பட்டது. நமது சடங்கு முறைகளிலும் கதை முக்கிய இடத்தை வகிப்பதைக் காணலாம். மனம் அவலத்துக்குள்ளாகி, நிம்மதியற்றுத் தவிக்கும்போது, மனதில் அமைதியைக் கதைகள் ஏற்படுத்த வல்லன.
பொதுவாகச் சிறுவர்களுக்கு உணவு ஊட்டும்போதும், உறங்கவைக்கும் போதும் கதைகள் சொல்லுவது வழக்கம். ஆதிகால மனிதர்கள் மரங்களின் கீழும். குகைகளிலும் வாழ்ந்தார்கள். ஓய்வான இரவுப் பொழுதைக் கழிப்பதற்காகக் கதைகள் கூறப்பட்டன. அதேபோல் வியாபாரிகள் கூட்டங்கூட்டமாகச் சேர்ந்து தூரதேசங்களுக்குச் செல்வார்கள். வழிகளில் கள்ளர் பயம் அதிகம். விழித்திருப்பதற்காகக் கதைகள் கூறுவார்கள். இவ்வாறுதான் ஆரேபியக் கதைகள் உருவாகியதாகக் கூறுவார்கள்.
பொதுவாகப் பாட்டிமார்கள் தமது பேரப்பிள்ளைகளுக்குக் கதைகளைக் கூறுவார்கள். இப்போது அந்த வாழ்க்கைமுறை மாறிவருகிறது. பொதுவாக கல்வி கற்கும் சிறுவர்களின் சிந்தனையை வளர்ப்பதற்கு அவர்களை வாசிக்கத் தூண்டவேண்டும். வாசிப்பது நல்ல பழக்கமாகும். வாசிப்பதால் நாம் அறிவைப் பெருக்கிக் கொள்கிறோம். நம்மைக் கற்பனையில் நமது ஆழ்த்தி மகிழவைப்பதும், சில சிக்கல்களைத் தீர்ப்பதற்குச் சிந்திக்கவும் வைக்கிறது. நல்ல புத்தகங்கள் நமக்கு நல்ல நண்பர்களாக இருக்கும். வாசிக்கப் பழகிவர்களுக்குத் தனிமை என்பது இல்லை. நம்மைச்சுற்றி நண்பர்கள் இருப்பதை உணரலாம். வாசிப்பதுடன் எழுதவும் பழகிக் கொள்ளவேண்டும். எழுது. ஏனென்றால் எழுதும்போது நீ சிந்திக்கின்றாய்’ என்று அறிஞர்கள் கூறியுள்ளார்கள். அது உண்மையே. சிறுவர்கள் இளமையிலேயே வாசிப்பதில் கவனம் செ செலுத்திக் கொண்டால் கற்பது மிக இலகுவாக இருக்கும். வாசித்தவற்றைச் சற்றுச் சிந்திக்கவும் வேண்டும். சிந்தனை புதுப்புதுக் கற்பனைகளைத் தரும். அவற்றை எழுதி, வாசித்தால் நமது திறமையை நாமே கண்டு கொள்ளலாம்.
சிறுவர்களுக்காக எழுதுவது சந்தோசமானது. அதனால் நான் இவ்வகை நூல்களை எழுதுகிறேன். வாசித்துப் பாருங்கள். சிந்தியுங்கள். நீங்களும் எழுதுங்கள். உலகம் உங்களைப் போற்றும்.
கேணிப்பித்தன் ச.அருளானந்தம்






Reviews
There are no reviews yet.