Description
என்னுரை
சிறுவருக்குக் கதைகள் எழுதுவது அற்புதமானதொரு செயலாகும். சிறுவருக்காக எழுதும்போது அவர்களையிட்டுச் சிந்திக்க வேண்டும். அவர்களது வயது, மொழியாளுமை, அவர்களைக் கவர்ந்திழுக்கும் நடை போன்ற பலவற்றையிட்டுச் சிந்தித்து எழுதுதல் வேண்டும். இன்றையச் சிறார்கள் வாசிப்பதில் பின்நிற்கிறார்கள் என்றால் அது யாருடைய பொறுப்பு? சிறுவர்கள் படிக்கும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர். சிறார்கள் வாழும் சமூகம் ஆகிய அனைத்தும் பொறுப்பினை ஏற்றுத்தான் ஆகவேண்டும்.
நமக்குக் கல்வித் திட்டங்களை முன்வைத்தோர் யார்? தமது நாட்டில் தோல்வி கண்ட கல்வித்திட்டங்களை நம் மேல சுமத்தி, அதனை நடைமுறைப் படுத்துவதற்காக நிதியையும் தருகிறார்கள். அதனை சிரமேற்கொண்டு நமது நாட்டைப் பாழடையச் செய்கிறோம்.
மேல்நாட்டவர்கள் இரண்டு வயது தொடக்கமே பிள்ளைகளை வாசிப்பதில் ஈடுபடுத்துகிறார்கள். சிறார்களைச் சிந்திக்கவும். ஆராய்ந்து கண்டறியும் அனுபவங்களையும் முன்வைக்கிறார்கள். முன்பள்ளிக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நாட்டின் வருமானத்தில் பெருந்தொகையைக் கல்விக்காக முதலீடு செய்கிறார்கள். ஆனால் நாம் எதிர்மாறாகச் செய்கிறோம். அவர்களது நாட்டில் தோல்வியைத் தழுவிக் கொண்ட கல்வித் திட்டங்களை நமது சிறார்களுக்குத் திணிக்கிறோம். நான் சிறுவயதில் வாசித்து இரசித்த பிறமொழிக் கதைகளையும் சேர்த்துள்ளேன்.
இன்று முகப்புத்தகத்தில் (Face Book) நமது சிறார்கள் மூழ்கிச் சமூகச் சீரழிவில் சிக்கித் தவிக்கிறார்கள். மொழி, பண்பாடு, என்பவற்றைப் புறக்கணிக்கின்றோம். இவற்றை இவ்வாறு தொடரவிட்டால் அனைத்தையும் இழந்து விடுவோம். இன்று தமிழ்மொழியில் எழுதும் ஆற்றல் குறைந்துவிட்டது. வாசிக்கும் திறனை நமது சிறார்களுக்கு ஊக்குவிக்க வேண்டும். அவர்களைச் சிந்திக்க வைக்கவேண்டும். வாசிப்பை ஊக்குவிக்க வேண்டும்.






Reviews
There are no reviews yet.